தமிழகத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரளவுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்” என்றும் தெரிவித்துள்ளது.