தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த ஒரு சில மாதங்களில் மின்வெட்டு பிரச்சினை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. இதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் மின்வெட்டு தொடர்ந்து நடைபெறுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதனையடுத்து தமிழகம் முழுவதுமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மின் வயர் அறுந்து விழுந்து உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் மின்சார வயர் அறுந்து வீழ்ந்ததில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே மாதத்தில் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதேபோன்று 6 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. 24 மணி நேரமும் தமிழகத்திற்கு சீரான மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற மின்கம்பி அறுந்து விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.