அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்களில் ஒருவர்தான் அமுதா ஐஏஎஸ்.இவர் தர்மபுரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். அதேசமயம் மணல் மாபியாவை துணிச்சலுடன் எதிர்த்து நடவடிக்கை எடுத்து கவனம் பெற்றவர். இவர் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் அமுதா ஐஏஎஸ்- ஐ தமிழகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. அமுதாவுக்கு என்ன பணியை ஸ்டாலின் கொடுக்கப் போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார். அதில் செங்கல்பட்டு மாவட்டம் அமுதா ஐஏஎஸ்- க்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அமுதா ஐஏஎஸ் ஆடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், அரசுக்கு தெரியாமல் ஏரி குளங்களை குத்தகைக்கு விடுவதைப் கண்டித்துள்ளார்.
ஏலத்தொகையை அரசு அலுவலகத்தில் செலுத்தாமல் செலவு கணக்கு காண்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், இதுபோன்ற நடைமுறை ஏதாவது பஞ்சாயத்தில் நடப்பது உறுதியானால், ஏலம் விட்டவர்கள், ஏலம் எடுத்தவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளை ஏலம் விடுவது குறித்து இதுவரை அலுவலகங்களில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால் இதற்கு முன் ஏதாவது எரி ஏலம் விடபட்டிருந்தால் அது செல்லாது.
அப்படி நடந்தால் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊராட்சி மன்றம் சார்பாக குளங்களுக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம். ஆனால் ஏரிக்கு அவர்கள் எதுவும் செய்ய முடியாது. ஏரியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசு அலுவலகங்களிடம் தான் உள்ளது. மேலும் தண்ணீர் செல்வதாக கூறி சில பகுதிகளில் பொதுமக்கள் ஏரியை உடைத்து விடுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமுதா ஐஏஎஸ் ஆடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.