Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி அனுமதி கிடையாது… மீறினால் நடவடிக்கை… அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி கிராமசபை கூட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க கூடாது என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. கிராம சபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன. இது ஊராட்சி சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.

அதனால் கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே கூட்ட வேண்டும். சட்டத்தால் அங்கீகாரம் பெற்றவர்களைத் தவிரதனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது. சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி கொச்சைப்படுத்தும் வகையில் இது உள்ளது. ஊரகப் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் காண வழி வகுக்கிறது கிராமசபை. அதனால் இனி கிராமசபை நடத்தினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |