Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தினமும் சராசரியாக விவசாயிகளிடமிருந்து ஆவின் நிறுவனம் மூலமாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்ச், பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.

ஆரஞ்சு நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 500 மில்லி லிட்டர் ஆவின் பால் 24 ரூபாய், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட் பால் விற்பனை செய்வதன் மூலமாக டீலர்களுக்கும் பார்லர் உரிமையாளர்களுக்கும் ஒரு ரூபாய் கமிஷன் வழங்கப்படுகின்றது.சமீபத்தில் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டு 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் ஆவின் பாலை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க தொடங்கி விட்டன.

இதனால் ஆவின் பால் விற்பனை ஐம்பதாயிரம் லிட்டருக்கு மேல் அதிகரித்துள்ளது.இதனிடையே ஆவின் பாலை டீலர்கள் மட்டுமன்றி அவர்களிடம் வாங்கிச் செல்லும் கடை உரிமையாளர்களும் ஒரு பாக்கெட்டிற்கு மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். அரசு மூன்று ரூபாய் விலை குறைப்பு செய்திருந்தாலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இனிவரும் நாட்களில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். மேலும் கூடுதல் விலையில் பால் விற்பனை செய்யும் டீலர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படவும் உள்ளது.

Categories

Tech |