Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இதற்கும் சொத்து வரி உண்டு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்படுகின்றது. அதில் ஒரு கட்டிடத்திற்கு சொத்துவரி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.தற்போது பல்வேறு இடங்களில் விதிமீறல் கட்டிடங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் முறையான வரைபடத்தில் உள்ள பாகங்களுக்கு மட்டுமே சொத்து வரி விதிக்கின்றனர்.

மேலும் விதிகளை மீறி கட்டப்பட்ட கூடுதல் பரப்புகளுக்கு சொத்து வரி விதிப்பதில்லை. இந்நிலையில் ஒரு கட்டிடத்தில் விதிகளை மீறி சில பாகங்கள் கட்டப்பட்டால் அதற்கும் சொத்து வரி விதிக்க வேண்டும். சொத்துவரி விதிப்பு அந்த கட்டிடத்தின் மீது விதிமிரலுக்காக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் கட்டுப்படுத்தாது.எனவே இனி இந்த வழிமுறைகள் அடிப்படையில் சொத்துவரி விதிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |