மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு இனி மருந்துகள் வழங்க கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப் பொருள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். கடந்த ஜூன் மாதம் வரை 9.19 கோடி மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு ரெண்டு புள்ளி 88 கோடி அபராதம் விதிக்கப்பட்டு 75 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகளிலும் கூட ஐந்து வகையான மருந்துகள் போதை தரக்கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மருத்துவர் உடைய பரிந்துரை ரசீது இல்லாமல் பொதுமக்களுக்கு இனி மருந்துகள் வழங்க கூடாது என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.