Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இது கட்டாயம் இல்லை…. ஜாலியா போகலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டு தற்போது அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கொரோனா சமயத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனிய கொரோனா பரிசோதனை தேவை இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனைப் போலவே வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை. காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே சோதனை தேவை. மேலும் மாநிலம் வீட்டு மாநிலம் செல்லும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |