Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த நாட்களில் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாக்கல் செய்ய முடியாது என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அளிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு பேர் மட்டுமே வர அனுமதி. 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |