Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த பணிக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட நியமனங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ள தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான விளம்பர பணிகளை உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நேரடி, பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலமாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் நடந்தது.

இந்நிலையில் நேரடி நியமனத்தில் காண அடிப்படை தகுதிகளை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது.அந்த குழுவின் அடிப்படையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் இனி அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும்.இந்தப் பணியில் சேர்வதற்கு ஊடகம் மற்றும் விளம்பரம் சார்ந்த பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |