தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய தொகுப்பு புதிய விரிவுரையாளர்களுக்கும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனத்தில் சலுகை வழங்கப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 497 இடங்கள் முதல் கட்டமாகவும் 1030 இடங்கள் இரண்டாம் கட்டமாகவும் நிரப்பப்பட்டுள்ளது .
493 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்களுக்கும் பனி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.இனிவரும் காலங்களில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணுடன் பணி அனுபவத்திற்கும் மதிப்பெண் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 6906 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.அதில் நான்காயிரம் இடங்களில் போட்டி தேர்வு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தி நியமனம் செய்யப்படும்.மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு அவர்களது பணி மேம்பாட்டுக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.