தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் என்னறிவு கல்வியை வழங்கும் விதமாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9.83 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் உதவியோடு 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு கல்வி அளிக்க பள்ளி கல்வித்துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 2025 ஆம் வருடத்திற்குள் கல்வி கற்றவர்களின் சதவீதத்தில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். வயதானவர்கள் கல்வி அறிவு இல்லாதன் காரணமாக கையெழுத்து அல்லது கைநாட்டோ வைப்பதனால் பலவித சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை தடுப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.