தமிழ்நாட்டில் உயர்கல்வி வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழி கல்வியை கொண்டு வர வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி இன்னும் கனவாகவே நீட்டிப்பது கவலை அளிப்பதாகவும் நம் தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்மொழியை காப்பதற்காக நூற்றுக்கணக்கான உயிர் தியாகம் செய்த நம் மாநிலத்தில் தமிழ்மொழிக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அனைத்தும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மதிப்பெண்கள் அடங்கிய தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெறுவது கட்டாயமாகும். ஏனெனில் இந்த தமிழ்மொழித் தேர்வு தகுதி தேர்வை கருத்தில் கொள்ளப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் கல்வி வரை தமிழ் மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட தாய்மொழிதான் கல்வி கற்கபடுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் அது இல்லை மற்ற நாடுகளை போல தமிழ்நாட்டிலும் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும், எனவும் அன்றைய நாள்தான் தமிழர்களுக்கு பொன்நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் படிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கபட வேண்டும் எனவும் கூறினார்.