Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கருணைத்தொகை ரூ.24,000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு குடிசை வாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிப்போர் கருணைத்தொகை 24,000 ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடிசை பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கருணாநிதி 1920ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதனால் பல்லாயிர குடிசைவாழ் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழக்கூடிய சூழல் உருவானது. அதன் தொடர்ச்சியாக குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு குடிசை மாற்று வாரியம் என்ற பெயரை “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என மாற்றம் செய்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் பாழடைந்த குடியிருப்புக்களில் வசித்த மக்கள் பயன் பெறும் விதமாக காரணி தொகையாக ஒரு குடும்பத்திற்கு இடத்தில் இருந்து 24,000 உயர்த்தி வழங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த கருணைத் தொகையை இரண்டு தவணைகளில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல் தவணையாக 12,000 ஒரு வருடத்திற்கு பிறகு இரண்டாவது பயணியாக பனிரெண்டாயிரம் என வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தொகை இட மாறுதலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடதக்கது. ஒரு குடும்பத்திற்கு தலா 24 ஆயிரத்தை ஒரே தொகுப்பாக கொடுக்க தேவையான நிர்வாக அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

Categories

Tech |