Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கொரோனா பரிசோதனை தேவையில்லை….. அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இடங்களிலும் பரிசோதனை கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதன்படி பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகளுக்கும் அறிகுறி இல்லாத பட்சத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும். மருத்துவமனைகளில் அனுமதியாகும் அனைத்து நோயாளிகளுக்கும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை தேவையில்லை.

அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அறிகுறி இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடு விமானங்களில் பயணித்தவர்கள் தோராயமாக இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |