Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி சீரான மின் விநியோகம் இருக்கும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!!

தமிழ்நாடு மின் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதன் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மின் விநியோகம் சீரான முறையில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இனி தமிழகத்தில் சீரான மின்சார விநியோகம் இருக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால் மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரிய நடவடிக்கையால் தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இன்று (நேற்று) மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |