Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மார்ச் 20ஆம் தேதி பள்ளிக் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதனால் மார்ச் 19ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  பாதிப்புக்கு எதிராக பல்வேறு தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, தற்போது தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இருப்பினும் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பொது தேர்விற்கான கால அட்டவணையும் அண்மையில் வெளியானது. இதனால் மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை முடிக்க வேண்டும் என்ற சூழலில் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

இதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பள்ளி மேலாண்மை குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மேலாண்மை குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக வரும் மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வர கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. மாநிலத்திலுள்ள 37, 391 அரசு பள்ளிகளிலும், பள்ளி அளவிலான மேலாண்மை கொள்கை மறுசீரமைக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இந்த கூட்டத்தை திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |