தமிழகத்தில் அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். இந்த நிலையில் திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் போதே இணையவழி அட்டை கட்டணம் 20 ரூபாய் மற்றும் தபால் கட்டணம் 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் .
மேலும் தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை,நகல் அட்டை பெற விரும்பாதவர்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி குடும்ப அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது