Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி பட்டா வழங்க…. காலதாமதம் கூடாது – அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இனி பாட்டா வழங்குவதில் காலதாமதம் இருக்கக்கூடாது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் தனிப்பிரிவுக்கு வருவாய் துறை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக வந்துள்ள நிலையில் அவற்றை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |