Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மாதந்தோறும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . புதிய ரேஷன் அட்டை வேண்டும் என்றாலும் அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றாலோ அல்லது முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பிரச்சினைக்ளுக்கு நாளை சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு அணுகலாம்.

மேலும் நியாயவிலை கடைகளுக்கு வரவை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொது விநியோகத் திட்ட குறைதீர்ப்பு முகாம் மாதம்தோறும் தமிழகத்தில் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |