Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மினி கிளினிக்களிலும் தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மினி கிளினிக் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் வரும் நாட்களில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்களிலும் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |