Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது விரைவில் தொடங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது.

இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இதில் சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் வாடகைதாரர்களிடம் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கின்றன. இது தவிர பல முறையிலும் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலர் விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இப்படி பல காரணங்களால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

அதே சமயம் ரேஷன் கார்டுகளிலும் பல மோசடிகள் அரங்கேறுகின்றன. இதனை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுவதால் ஒரே நபர் வேறு முகவரியில் கார்டு வாங்க முடியாது. மற்ற கார்டுகளிலும் உறுப்பினராக சேர முடியாது. ரேஷன் அட்டையை தொடர்ந்து இலவச மின்சாரத்தில் முறைகேடு தடுக்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் மின்னட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறை அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |