தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவு பெறுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இனி தடுப்பூசி முகாம்கள் அக்டோபர் முதல் புதன் கிழமை அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.
இன்றோடு மெகா தடுப்பூசி முகாம்கள் முடிவடைகிறது. அதேபோல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் செப்.,30 உடன் நிறைவடைகிறது. மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளும்படி” அறிவுறுத்தியுள்ளார்.