Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி 24 மணி நேரமும்… முதல்வர் புதிய செம மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகள் பயனடையும் வகையில் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி பற்றி விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |