Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் புதிய நடைமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. அதில் இன்ஜினியரிங் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதாவது இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் இல் ஒவ்வொரு சுற்றிலும் ஒதுக்கீடு பெரும் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளில் ஒரு வாரத்திற்குள் சென்று அசல் சான்றிதழ்கள் வழங்கி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு மாணவர்கள் சேர்ந்த தகவலை கல்லூரி காண இன்ஜினியரிங் கவுன்சிலிங் டிஜிட்டல் தளத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக இருப்பதாக கருதி அடுத்த சுற்றில் வேறு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே தமிழக முழுவதும் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் இதனை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |