Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை… முடி வெட்ட, பொருட்கள் வாங்க தடை…. எங்கு தெரியுமா…???

தீண்டாமை இன்னும் தமிழகத்தில் நிலவி வருவதாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் சலூன் கடைகளில் முடிவெட்ட தடை இருப்பதாகவும், அங்கு இரட்டை குவளை முறையும் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் பட்டியலின மக்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்கக்கூடாது என ஊர் பஞ்சாயத்து கடைகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபற்றி கேட்டபோது கிராம மக்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்த இருந்ததாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |