தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வரை 261.7 மி.மீ பெய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 வாரம் தெற்கு மற்றும் உள் தமிழ்நாடு மாவட்டங்கள் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.