கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை பெய்யக்கூடும். நவம்பர் 20-ஆம் தேதியில் திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். இன்று அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.