தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன் காரணமாக அனைத்து கொரியர் மற்றும் பார்சல் சேவை நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை 15 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.இதில் 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் 400 கி.மீ. தூரம் வரை 150 ரூபாயாக இருந்தது. தற்போது அது 170 ரூபாயாகவும், 600 கி.மீ. தூரம் வரை 170 ரூபாயாக இருந்தது தற்போது 200 ரூபாயகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த கட்டணம் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த எடைக்கு மேல் 100 கிலோ வரையில் 50 ரூபாய் முதல் 150 வரையும், 100 கிலோவுக்கு மேல் ஒரு டன் வரையில் 300 ரூபாய் முதல் தூரத்தின் அடிப்படையில் 800 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரியர் நிறுவனங்கள் உள்ளூர் கவருக்கு 10 ரூபாயும், வெளியூர் பார்சலுக்கு 15 ரூபாயும், வெளி மாநில பார்சலுக்கு 30 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. எடைக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரித்துள்ளன.