Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்டம்பர் 7) இதற்கான சிறப்பு முகாம்….. மறக்காம கலந்துக்கோங்க மக்களே…!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல புதிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பெண்கள், பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து துறையினருக்குமே தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல தனியார் தொழில் நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது.

அதாவது வேலை வாய்ப்பு உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை செய்து வருகிறது. இதனை அடுத்து மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதில் சிரமங்களை ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக சிறப்பு முகாம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேலூர் அரசு மருத்துவமனையில் இன்று(செப்டம்பர் 7  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கு பெற குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஐந்து புகைப்படங்களுடன் சென்று பயன்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |