முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) விருதுநகர் வருகை தர உள்ளார். ஆதலால் கீழ்க்கண்ட நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) இடது புறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம், கோவில்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் பாலத்தில் இருந்து இடது புறமாக திரும்பி மதுரை ரிங் ரோட்டில் அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் 4 வழி சாலையில் வலது புறம் திருப்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டயாபுரம், கோவில்பட்டி செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.