Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…15) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை டாட்டாபாத் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , பீளமேடு துணை மின் நிலையம், ஆர்கஸ் நகர், பெருமாள் கோவில், ரங்கவிலாஸ் மில், மீனா எஸ்டேட், பாரதி நகர், பி. எஸ். ஜி மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்துவமனை, கருணாநிதி நகர், கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, ஸ்ரீபதி நகர், நஞ்சுண்டாபுரம் ரோடு ஒரு பகுதி, ராமநாதபுரம், பீளமேடு, ஆர். கே. புரம், புளியகுளம், அம்மன் குளம், ஏரி மேடு, சவுரிபாளையம், உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் இன்று செப்டம்பர் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காராணமாக ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர். பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க. சுப்பிரமணிய புரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர். சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம். ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே. குமாரபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி- தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இன்று 15- ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ. பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று 15 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், கொங்கராயனுார், ஏ. கே. பாளையம், எஸ். கே. பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரிபாளையம், முத்துகிருஷ்ணாபுரம், எழுமேடு, ஆண்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Categories

Tech |