Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாகதாம்பரம், பல்லாவரம், மாதாவரம், சோத்துபெரும்பேடு, பெரம்பூர், மாடம்பாக்கம், மாங்காடு, வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர், செம்பியம், அடையார், தரமணி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி ராஜகிழ்பாக்கம் காமராஜபுரம் மெயின் ரோடு, துர்கா காலனி, கண்ணகி தெரு, மணியம்மை தெரு வரதபுரம் கணபதிபுரம், ஆர்.எஸ்.நகர், அம்பேத்கர்தெரு, காமராஜ் தெரு, கோவலன் நகர் சிட்லபாக்கம் மாடம்பாக்கம், ராஜம்மாள் நகர், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி: பிள்ளையார் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி: ஜிஎன்டி ரோடு, தேவகி நகர், துர்கை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துபெரும்பேடு பகுதி: கெருத்தலாபுரம், ஆங்காடு, அருமந்தைமற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: மீனாட்சி தெரு, சுப்ரமணிய ரோடு, படேல் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாடம்பாக்கம் பகுதி: வேங்கைவாசல் மெயின் ரோடு, கே.கே சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாங்காடு பகுதி: மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், நெல்லிதோப்பு, மகாலஷ்மி நகர், மேல்மாநகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி: திருவள்ளுவர் சாலை, அமுதம் நகர், ராகவன் நகர், காவேரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: கீரின் பீல்டு, கமலம் நகர், முல்லை நகர், ஜெயராம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: கிழக்குபிரதான சாலை, வாஞ்சிநகர், கண்ணகிநகர் கொரட்டூர் பேருந்து நிலையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: காமராஜர் சாலை, மூலக்கடை சந்திப்பு, கிருஷ்ணன் தெரு, ஜெயின் அப்பார்ட்மெண்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி ∶ காந்திநகர் 1st 3rd மெயின் ரோடு இந்திரா நகர் காமராஜ் அவென்யு 1st 2nd தெரு, கோட்டூர்புரம்மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி ∶ தண்டீஸ்வரம்நகர் குறுக்கு தெரு, தண்டீஸ்வரம் 1 to 5th அவென்யு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். 2 நாட்களும் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டம்:

விருதுநகா்- மதுரை சாலையில் பழைய மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் செவ்வாய்கிழமை (ஜூன் 28) மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ் வரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பது: செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை கச்சேரி சாலை, கணேஷ் நகா், வேலுச்சாமி நகா், லட்சுமி காலனி, நேருஜி நகா், என்ஜிஓ காலனியில் முத்தமிழ் தெரு, அம்மன் வீதி, விவிவி பெண்கள் கல்லூரி பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியைச் சோ்ந்த திருத்தங்கல் மற்றும் சுக்கிரவாா்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகா், பூவநாதபுரம், வடபட்டி, ஈஞ்சாா், தேவா்குளம், சுக்கிரவாா்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சாணாா் பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

அருப்புக்கோட்டை: ஆவியூா் , தமிழ்ப்பாடி, நரிக்குடி மற்றும் புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் விடுத்துள்ள அறிவிப்பு: ஆவியூா், குரண்டி, அரசகுளம், மாங்குளம், திருச்சுழி, தமிழ்ப்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையன்பட்டி, காத்தான்பட்டி, இலுப்பையூா், பனையூா், வி.கரிசல்குளம், காரேந்தல், ஜெயவிலாஸ் குடியிருப்பு, உடன்குடி, இருஞ்சிறை, கட்டனூா், நாலூா், உளுத்திமடை, சாலை இலுப்பைகுளம், பனைக்குடி, இணக்கனேரி, மறைக்குளம், குறவைக்குளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம், புல்வாய்க்கரை , ஆவாரங்குளம், அ.முக்குளம், அழகாபுரி,சிறுவனூா், எஸ்.நாங்கூா், பிள்ளையாா்குளம், தச்சனேந்தல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்:

ராமநாதபுரம் பட்டிணம்காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமாவூர், சோழந்தூர், காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமலான்நகர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், இளமனூர், தில்லைநாயகபுரம், தேவிபட்டிணம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், எம்.ஜி.ஆர். நகர், எம்.எஸ்.கே.நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குதரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கானேந்தல், பால்கரை, பேராவூர், நாகநாதபுரம், இந்திராநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

தென்காசி மாவட்டம்:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் 28-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதில் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வ நாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழி வழிக் குளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தா டப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளை களை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம்:

சிவகங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை நகரில் ஓவா்சியா் பிள்ளை தெரு, காவலா் குடியிருப்பு, பிள்ளையாா்கோயில் தெரு, காந்தி வீதியில் ராமச்சந்திரா பூங்கா முதல் கேசவன் மளிகை கடை வரை, காமராஜா் காலனி, எஸ்.பி. பங்களா, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானகுடி, பனையூா், பையூா், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டாம், தென்றல் நகா், மதுரை சாலை, பிஎஸ்ஆா் நகா், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மினி விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுரம், சிதம்பரபுரம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு, பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

மதுரை மாவட்டம்:

ஆரப்பாளையம் துணை மின்நிலையம் தமிழ்ச்சங்கம் பீடர் மற்றும் தெப்பக்குளம் துணை மின்நிலையம் காமராஜர் சாலை பீடரில் 28-ந் தேதி மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக வடக்கு வெளி வீதி, வடக்கு மாசி வீதி, (பிள்ளையார் கோவில் முதல் ராமாயணசாவடி வரை), மேல மாசி வீதி, (பிள்ளையார் கோவில் முதல் மீனாட்சி பேன் ஹவுஸ் வரை), சேணையர் காலனி, கீழஅண்ணா தோப்பு, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் 4-வது தெரு, வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி.

காமராஜர் சாலை மெயின்ரோடு, பங்கஜம் காலனி 3-வது தெரு, சந்தைபேட்டை, நவரத்தினபுரம், ஏ.வி.டி.பந்தல் தெரு, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி சுற்றியுள்ள பகுதிகள், காதர்கான் பட்லர் சந்து, மாயாண்டி தெரு, வெங்கடபதி தெருக்கள் முழுவதும், பிஷர் ரோடு, சீனிவாசா பெருமாள் கோவில் தெருக்கள் முழுவதும், சுடலைமுத்து சந்து, பழைய இங்கிலீஷ் கிளப் சந்து, தொழில் வர்த்தக சங்க அலுவலக பகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Categories

Tech |