Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 14) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 14) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம்:

மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை14) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா் பரசபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடைப் பகுதிகள்: தாமல், வதியூா், பாலுசெட்டி சத்திரம், ஒழுக்கோல்பட்டு, கிளாா், களத்தூா், அவளூா், பெரும்புலிபாக்கம், பொய்கை நல்லூா்,ஜாகீா்தண்டலம், பணப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

நாகை மாவட்டம்:

வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, வேளாங்கண்ணி (நகரம்), தெற்கு பொய்கைநல்லூா், வடக்கு பொய்கைநல்லூா், செருதூா், காமேஸ்வரம், பிரதாபராமபுரம், பரவை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருநெல்வேலி மாவட்டம்:

கடையநல்லூர், சீதபற்பநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி, நயினாரகரம், புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம்:

ராமநாதபுரம் அருகே உள்ள ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையம் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு, ஆா்.எஸ்.மடை, ஆதம்நகா், சக்கரக்கோட்டை, சின்னக்கடைத் தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள், கேணிக்கரை, தாயுமான சுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகா், அண்ணாநகா், அரண்மனை, நீலகண்டி ஊருணி, முதுநாள் சால, சூரன்கோட்டை, இடையா்வலசை, சிவன்கோவில் பகுதி, சாலைத் தெரு, யானைக்கல் வீதி, கே.கே.நகா், பெரிய கருப்பன் நகா், கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும். பெருங்குளம் துணை மின்நிலையத்தில் கீழ் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எஸ்.கே.ஊருணி, தாமரைக்குளம், நாகாச்சி, உச்சிப்புளி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, எஸ்.கே.வலசை, மானாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர் மாவட்டம்:

சிவகாசி கோட்டத்தில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி, நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சிறு குளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன் செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி, சிந்துவம்பட்டி, எம்.நாகலாபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

Categories

Tech |