Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட் …..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூலை 4) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையார், வேளச்சேரி, கே.கே நகர், பெரம்பூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி : சிட்லபாக்கம் சிட்லபாக்கம், துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஜோதி நகர் I, II தெரு, பெரியார் தெரு, காந்தி தெரு மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், சாந்தா நகர், பாய் கார்டன் பெருங்களத்தூர் செல்வவிநாயகர் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, புத்தர் நகர், விஷ்ணு நகர், சிவகாமி தெரு, ராஜகீழ்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, சுந்தரம் காலனி, ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, காமராஜபுரம் மெயின் ரோடு, வெங்கடாஜலபதி தெரு, ராஜீவ்காந்தி தெரு, மணியம்மை தெரு கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோவில் தெரு, ராஜம் நகர், பொன்னியம்மன் நகர் பள்ளிகரணை அசாம் பவன், காமாட்சி மருத்துவமனை, ஸ்ரீனிவாசா நகர், தோஷி பிளாட்ஸ், ஆர்.வி.டவர்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: கிண்டி, ராஜ்பவன், ஆலந்தூர், பரங்கிமலை, ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர்.

ஆவடி பகுதி: புழல் கதிர்வேடு பகுதி முழுவதும், சீனிவாசன் நகர், எழில் நகர் மிட்டனமல்லி மிட்டனமல்லி காலனி, ராஜிவ் காந்தி நகர், சிதம்பரம் நகர், கேரிசன் ஆவடி கலைஞர் நகர், கோயில்பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி : ஐஐடி ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு மெயின் ரோடு , எத்திராஜ் தெரு, யோகி கார்டன், கந்தசாமி தெரு, கனால் பாங்க் ரோடு, கே.பி.நகர் 2வது குறுக்கு தெரு மற்றும் 3வது குறுக்கு தெரு, கோவிந்ததராஜபுரம் பெசன்ட்நகர் காமராஜ் சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, பெரியார் தெரு, வால்மீகி தெரு, ஈஞ்சம்பாக்கம் உத்தாண்டி கிராமம், ஈடன் கார்டன், ராஜன் கார்டன், ஈ.சி.ஆர் ஒரு பகுதி, ராஜீவ் காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி பகுதி : ராம் நகர் 7th 8th 10th 11th 12th தெரு, விஜயா நகர் 3rd 4th 5th தெரு, பைபாஸ் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, நாகைந்ரா நகர், அண்ணா கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி : கோடம்பாக்கம், கே.கே நகர் கிழக்கு, அசோக்நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி : சி.எம்.பி.டி தேவி நகர், ஜோதி நகர், ராஜன் நகர், பாரதி தெரு காந்தி நகர் ரேணுகாம்மன் 1 முதல் 5வது வரை, புத்து தெரு, அண்ணாநகர், பெரியார் தெரு, நேர்மைநகர் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாட தெரு, பள்ளி சாலை, பொன்னுசாமி நகர் ஐசிஎப் கே.எச்.சாலை, அயனாவரம், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கன்னியாகுமரி:

குழித்துறை துணை கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று  மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாங்கை, கல்லுத்தொட்டி, ஈடன் கார்டன், நாகச்சன்விளை, சீனிவிளை, பாட்டவிளை, பிராணிவிளை, குஞ்சாலுவிளை, தச்சூர்கோ ணம், குழிஞ்ஞான்விளை, மீனச்சல், மேலோட்டுவிளை, செம்மன்காலை, மடத்து விளை, நடப்பாறவிளை, நுள்ளிக்காடு, கண்ணன்புரம், பேயோட்டுகோணம், ஆலம்பாறை, செறக்கோ ணம், கட்டச்சல், சிற்றாற்ற ன்கரை ஆகிய பகுதிகளில் இன்று  காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

விருதுநகர்:

விருதுநகர் மின் கோட்டத்தில் இன்று  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இப்பகுதியில் உள்ள சமத்துவபுரம், சின்னப்பரெட்டியபட்டி, பெரியவள்ளி குளம், புதுப்பட்டி, நோபிள் பள்ளி, மத்திய சேனை, உப்புஓடை, விருதுநகர் படேல் ரோடு, சாஸ்திரி நகர், பாண்டியன் நகர், முத்தால் நகர், மல்லாங்கிணறு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல விருதுநகர் கட்டையாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மதியம் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியாகம் நிறுத்தப்படும். இதேபோன்று வில்லிபத்திரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி,

அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சம்மட்டிபுரம்மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 7- வது தெரு முதல் 15-வது தெரு வரை, கோ-ஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர்,தேவகி ஸ்கேன், வெள்ளக்கண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதூர், அமிர்தா நகர், தேனி மெயின்ரோடு முதல் ஈத்கா பில்டிங் வரை, பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை தெப்பக்குளம் துணை மின்நிலையம் கேட்லாக் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புது மீனாட்சி நகர், கேட்லாக் ரோடு, மேல அனுப்பானடி, சின்ன கண்மாய், ஜோசப் பார்க், சி.எம்.ஆர்.ரோட்டின் ஒரு பகுதி, சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சமயநல்லூர் துணைமின்நிலையம் வைரவநத்தம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சித்தாலங்குடி, ஆணைக்குளம், வைரவநத்தம், வயலூர், சித்தன்குளம் ஆகிய பகுதிகளில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

Categories

Tech |