புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊரியர்கள் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் புலியூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, வெள்ளாளப்பட்டி, மணவாசி, தொழில் பேட்டை, மேலடை, சின்னகிணத்துப்பட்டி, வையாபுரி கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதே போல, எஸ். வெள்ளாளப்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்ள சிட்கோ, தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லை நகர் செல்வம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினியோகம் இருக்காது.
மதுரை
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி உலா ரோடு பொதுப்பணித்துறை குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ்காலனி, பாஸ்போர்ட் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, தாமரைத் தொட்டி முதல் அன்பகம் வரை, யூனியன் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி. எஸ். நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு. விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு. தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர். வி. நகர். பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் நகர், அல்லித்துறை, ஸ்ரீரங்கம் தாலுக்காவின் வயலூர் மற்றும் அப்பாதுரை எசனைக்கொரை, மாந்துறை, திருமங்கலம், வாளாடி மேற்கு லால்குடி பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி மாதவரம் ஜி. என். டி. ரோடு, மாத்தூா், மஞ்சம்பாக்கம் அனைத்துத் தெருக்கள், செல்லியம்மன் நகா், பாா்த்திபுரம், ஜெயா நகா், ஆவின் குடியிருப்பு, காமராஜா் சாலை, புனித அனீஸ் பள்ளி, ஷெல் பெட்ரோல் பங்க், பெரிய சாலை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் அருகிலும் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் வினியோகம் நிறுத்தப்படும்