Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்..25) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு மின் பராமரிப்பு பணிகளின்போது மின் ஊழியர்கள் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பிற்காக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடுகின்றனர். இதனால் மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மின் பராமரிப்பின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாகவுள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. இதையடுத்து மின் கம்பிகள், வயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து இன்று(பிப்…25) புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் பிப்ரவரி 25 (இன்று) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்

ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுலம், மணவிடுதி, சொக்கநாதபட்டி, சோத்துப்பாளை, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி, மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசு பட்டி, மெய்குடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய இடங்களில் இன்று(பிப்..25) மின்தடை செய்யப்படும்.

Categories

Tech |