Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்…28) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி வழக்கமாக நடைபெறும். ஏனெனில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கவும், மழைக் காலங்களில் ஏற்படும் மின் தடைகளை தடுப்பதற்கும் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இவ்வாறு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட மணி நேரம் மின்தடை ஏற்படும்.

இந்த மின்தடை அறிவிப்பு குறித்த தகவல் முன்பாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக ஆட்சி அனைத்து துறைகளிலும் பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சாயல்குடி மின் பாதையில் இன்று(பிப்..28) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.

இதனால் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக இன்று(பிப்..28) சில மணி நேரம் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) சாயல்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாயல்குடி நகர் பகுதிகள், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூர், முந்தல், நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர், கடுகு சந்தை சத்திரம், மலட்டாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |