Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(மார்ச் 15) உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற தியாகராஜசுவாமி கோவில் தேர் திருவிழா இன்று  நடைபெற உள்ளது. அந்த நன்னாள் இலட்சக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்து திரண்டு வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எந்த கோவிலும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். பிப்ரவரி 20ஆம் தேதி இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறைவான பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |