Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும்… ஆம்னி பேருந்துகள் இயங்கும்….!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம்,அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது திங்கட்கிழமை காலை முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இன்றும் நாளையும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக மொத்தம் 4500சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையில் இருந்து மட்டும் 1500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனையடுத்து வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |