Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது… இந்த நிலையில் இன்று கோவை, நெல்லை கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாளை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குமரி, மன்னார் வளைகுடா, அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |