Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,சேலம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |