தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து குமரி கடற்பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஐந்து மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பகல் 12 மணி வரையில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.