Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஆக 30) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. மொத்த லிஸ்ட் வெளியீடு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  (30-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்டம்:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வாளாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.30) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக வாளாடி துணை மின் நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் நகா், வேலாயுதபுரம், கீழ, மேலப்பெருங்காவூா், தண்டாங்கோரை, திருமணமேடு, பச்சாம்பேட்டை, டி. வளவனூா், மேல, கீழவாளாடி, தா்மநாதபுரம், முத்துராஜபுரம், சிறுமருதூா், எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகங்கநல்லூா், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆா். வளவனூா், பல்லவபுரம், புதூா் உத்தமனூா், வேளாண் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கோவை மாவட்டம்:

இருகூா் துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம்(ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூா்.

விருதுநகர்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஆகையால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், வேப்பங்குளம், வி.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னி தேவன்பட்டி, அட்டைமில் முக்கு ரோடு, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

புதுக்கோட்டை:

வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பசுவயல், அரையப்பட்டி, பள்ளத்திவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வடகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம்:

தஞ்சை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க் கிழமை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது. ஆகையால், காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா மின்வாரியம் சார்பில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |