தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் இரவு முதலே இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி,திருப்பத்தூர் மற்றும் வேலூராகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.