Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று…. இவ்ளோ பேருக்கா?…. சுகாதாரத்துறை சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 7,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,04,762 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23,938 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனவே தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,28,151 ஆக உள்ளது. அதேபோல் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 37,733 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொரோனா காரணமாக 1,38,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |