Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று [ஏப்ரல் 1] முதல்….. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவாவிற்கு 7.14% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மேகலாயாவிற்கு 1.77% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2 முதல் 3 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டாமன், டையூ, நாகர் ஹவேலி, தாத்ரா, ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் 3 முதல் 4 சதவீதம் வரை‌ உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தெலுங்கானா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 4 முதல் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்கண்ட், பீகார், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு 5 சதவீதத்திற்கும் அதிகமாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |