இன்று(ஏப்ரல் 2) மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், வேலைவாய்ப்பற்றோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள்-2022
நிறுவனம் | District Employment and Career Guidance Centre, (TIRUPUR) |
பணியின் பெயர் | Multiple Jobs |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இந்நிலையில் இந்த மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமானது முற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படுகிறது. இதையடுத்து இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மற்றும் ITI / Diploma / Nursing / PG / UG / degree போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதேனும் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் அனைத்து வயதினரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இதையடுத்து இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு எந்தவித விண்ணப்ப கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் எதுவும் கிடையாது என்று அறிவித்துள்ளது.
மேலும் இம்முகாமில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பணிகளுக்கு அவர்களை தேர்வு செய்ய உள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார் போல் தகுதிக்கேற்ப சம்பளம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று முன்பதிவுகளை செய்யலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அதன்படி, ROOM NO 20 , NEW COLLECTOR OFFICE CAMPUS, PALLADAM ROAD, TIRUPUR என்ற முகவரிக்கு இன்று(ஏப்ரல் 2) நேரில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிக்குள் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.