தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,855-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,808 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,12,096 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 51,335 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.