Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து  கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது.

இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,99,225 ஆக அதிகரித்துள்ளது. இன்று 365 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,26,915 ஆக அதிகரித்துள்ளது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,62,401 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 2,50,91,007  ஆக இருக்கின்றது. தமிழகத்தில் தற்போது வரை 2,53,576 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Categories

Tech |